search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் அரசு ஆஸ்பத்திரி"

    சேலத்தில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை, ராமசுந்தரம் தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி தீபிகா (வயது 27). இவர்களுக்கு திருமணம் நடந்து 4 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு முகிலன் (3) என்ற மகன் உள்ளார்.

    இந்த நிலையில் அறிவழகன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும் அவர், தனது மனைவி தீபிகாவிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    நேற்று இரவு இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது தீபிகா வீட்டின் அறையில் திடீரென தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதையடுத்து அறிவழகன் குடும்பத்தினர் வீட்டின் வெளியே வந்து அக்கம், பக்கத்தினரிடம் தீபிகா அறை கதவை பூட்டிக் கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே ஓடி வாருங்கள் என கூறியுள்ளனர்.

    உடனே அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அறை கதவை உடைத்து உள்ளே புகுந்து தீபிகாவை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக வாகனத்தில் ஏற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் பற்றி அம்மாப் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தீபிகா எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே மகள் இறந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் அவருடைய தாய் கதறி அழுதார். இன்று காலை பெற்றோர் தங்களது உறவினர்கள் சுமார் 100 பேருடன் திரண்டு சேலம் அரசு ஆஸ்பத்திக்கு வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறை முன்பு முற்றுகையிட்டு மகள் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி கதறி அழுதனர்.

    அப்போது தீபிகாவின் தாயார் போலீசாரிடம் கண்ணீர் மல்க கூறியதாவது:-

    இரவு 10 மணி வரை தீபிகா எங்களிடம் நல்லாகத்தான் பேசிக் கொண்டிருந்தார். அதன் பிறகு அவர் எப்படி தற்கொலை செய்திருக்க முடியும்?. தீபிகா சாவில் மர்மம் உள்ளது. அவரை அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விட்டு இருக்கிறார்கள். போலீசார் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.

    தொடர்ந்து பிரேத பரிசோதனை அறை முன்பு தீபிகாவின் குடும்பத்தினர் கதறி அழுதபடி இருந்ததை பார்க்கும்போது சோகத்தை ஏற்படுத்தியது.

    தீபிகாவுக்கு திருமணமாகி 4 வருடங்களே ஆவதால் சேலம் ஆர்.டி.ஓ.குமரேசன் மேல் விசாரணை நடத்த உள்ளார்.

    கன்னங்குறிச்சியில் செல்போன் வாங்கி கொடுக்காததால் மெக்கானிக் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி ஆறுமுகஅய்யர் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் மணிகண்டன் என்ற பிரபு (வயது 25).

    ஐ.டி.ஐ.படித்துள்ள இவர் சேலத்தில் உள்ள ஒரு கார் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். கடந்த 6 மாதங்களாக தனது பெற்றோரிடம் ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கி தரும்படி மணிகண்டன் கேட்டு வந்தார்.

    பொங்கல் பண்டிகையையொட்டி வாங்கி தருவதாக அவரது பெற்றோர் கூறி வந்தனர். தற்போது பொங்கல் பண்டிகை முடிந்தும் செல்போன் வாங்கி தர வில்லையே என்று மணிகண்டன் மீண்டும் கேட்டார். அப்போது விரைவில் வாங்கி தருவதாக கூறினர்.

    நேற்றிரவு 11 மணியளவில் தனது அறைக்கு மணிகண்டன் தூங்க சென்றனர். அப்போது நீண்ட நேரமாக அறை விளக்குகள் எரிந்ததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை தட்டினர். கதவை திறக்காதால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் மணிகண்டன் கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதறினர். உடனே அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்போன் வாங்கி கொடுக்காததால் வாலிபர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேலம்:

    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக தமிழக அரசு டாக்டர்களுக்கு ஊதியம் மற்றும் பஞ்சப்படி வழங்கிடக்கோரி அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று காலையில் சேலம் அரசு மருத்துவமனை டீன் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் கண்ணன், பயிற்சி டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் தங்கராஜ் ஆகியோர் தலைமையில் 40 பேர் கலந்து கொண்டனர்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி மதியம் வேளையில் ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜசேகர், மாநில செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் டீன் அலுவலகம் முன்பு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்று கோ‌ஷங்களை எழுப்பினார்கள். ஒரே நாளில் டாக்டர்கள் போட்டி போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு ஆஸ்பத்திரி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    ×